காஞ்சிபுரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
காஞ்சிபுரம், ஜூலை 28:
காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் கோயிலின் ஆடித் திருவிழாவின் 3வது நாள் நிகழ்வாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும்,பாராட்டுச் சான்றிதழும் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்தக்குளம் அருகே அமைந்துள்ளது குளக்கரை மாரியம்மன் கோயில்.இக்கோயிலின் ஆடித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
3வது நாள் நிகழ்வாக பாஜக மேற்கு மாவட்ட தலைவர் காஞ்சி வி.ஜீவானந்தம் தலைமையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ராதாம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சோழன் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சஞ்சீவி ஜெயராம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் சஞ்சீவி ராஜா சுவாமிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். விழாவினையொட்டி காலையில் கூழ்வார்த்தல்,பொங்கல் வைத்தல் மற்றும் அம்மன் வீதியுலா நிகழ்வுகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments