3 ஊராட்சிகளுக்கு "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம் குன்னத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மூன்று ஊராட்சிகளுக்கு "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி வரும் அரசின் சேவைகள் என்ற மக்களின் முதல்வர் சிறப்பு முகாம் 2024 கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம், குன்னத்தூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் குன்னத்தூர், பச்சாபாளையம் மற்றும் நாரணாபுரம் ஆகிய ஊராட்சி பொதுமக்களுக்காக நடைபெற்றது. நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் குன்னத்தூர் கீதா தங்கராஜ், பச்சாபாளையம் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து குத்து விளக்கு ஏற்று வைத்தார்கள். இதில் முகாமை கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் நித்திலவள்ளி, துணை தாசில்தார்கள் ரேவதி, தெய்வ பாண்டியம்மாள் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுகவினர் மற்றும் சிவசக்தி சமூக சேவை நிறுவனர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை எழுதி கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவசக்தி சமூக சேவை நிறுவனம் செய்திருந்தது.
No comments
Thank you for your comments