"ஜாமின் தரவே கூடாது" - நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நடிகை கௌதமி
திரைப்பட நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த வழக்கில் வழக்கு விசாரணைக்காக நடிகை கெளதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான அழகப்பன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிப்பதற்காக நேரில் ஆஜரான நடிகை கொளதமி.
நீதிமன்றத்திற்கு வந்த நடிகை கெளதமியுடன் புகைப்படம் எடுத்து கொண்ட ரசிகர்கள்.
காஞ்சிபுரம்:
இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த அழகப்பன்(64) என்பவரிடம் திரைப்பட நடிகை கௌதமி கேட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து திரைப்பட நடிகை கௌதமி நலத்தை விற்பனை செய்வதற்காக நில புரோக்கர் அழகப்பன் பேரில் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் உரிமை செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அழகப்பன் தனது நண்பர்களான ரகுநாதன், சுகுமாரன், மற்றும் பலராமன், ஆகியோருடன் சேர்ந்து மேற்படி சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அதற்கு உண்டான பணத்தையும் தராமல் மோசடி செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட திரைப்பட நடிகை கௌதமி, அழகப்பன் தன்னை ஏமாற்றியதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் குற்ற எண்.03/2024 u/s 406, 420 r/w 34 IPC & 5 .04/2024 u/s 406, 420 r/w 34 IPC 14 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து மேற்படி அழகப்பன் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இருந்த அழகப்பனை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் வைத்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட அழகப்பனிடம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றபிரிவில் அளிக்கப்பட்ட இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகப்பன் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நடிகை கொளதமி அழகப்பனுக்கு ஜாமின் வழங்க கூடாது என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி மனுதாரர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்காக காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் நேரில் ஆஜரானர் நடிகை கௌதமி.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட இரு வழக்குகள் தொடர்பாக விசாரணைக்காக அழகப்பனை ஐந்து நாள் காவலில் எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்துள்ளனர்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை கௌதமியுடன் அங்கிருந்த ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
No comments
Thank you for your comments