தமிழ் மொழி வளர்ச்சிக்கு 3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, 10 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு 3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 10 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்திலிருந்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈசுவரன் தலைமை வகித்து தெரிவித்ததாவது
தமிழ் மொழி வளர்ச்சிக்கு 3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, 10 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் நடவடிக்கையின் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்திலிருந்து தபால் அட்டைகளை அனுப்பி உள்ளோம்.
இதன் பின்பு அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று அனைத்து மாணவர்களிடத்திலும் கையெழுத்து பெற்று தபால் அட்டைகளை நரேந்திர மோடிக்கு தொடர்ந்து அனுப்ப உள்ளோம். இந்திய அளவில் மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீடு குறித்து தெளிவாக விளக்க உள்ளோம் என்றார். இந்நிகழ்ச்சியில் முத்துசாமி, செல்வராஜ், ராஜ்,கந்தசாமி, சுப்பிரமணி, பெருமாள் சாமி, இயக்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தபால்கள் அனுப்பினர்.
No comments
Thank you for your comments