Breaking News

ஃபேர்புரோ 2024 கண்காட்சி ஆக.2ம் தேதி துவக்கம் கோவை கொடிசியாவில் 3 நாட்கள் நடக்கிறது

கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர்புரோ 2024 கண்காட்சி ஆகஸ்ட் 2,3,4,ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. கண்காட்சியின் அறிமுக விழா அவினாசி ரோடு தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் தலைவர் குகன் இளங்கோ, சேர்மேன் சுரேந்தர் விட்டல் , ஃபேர்புரோ 2024 கண்காட்சி செயலர் எஸ்.ஆர். அரவிந்த்குமார் ஆகியோர் தெரிவித்ததாவது. இக்கண்காட்சியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா டைட்டில் பார்ட்னராகவும், ஜாககுவார் மற்றும் ரெனாகான் கோல்டன் பார்ட்னராகவும் பங்கேற்கின்றனர்.

கிரெடாய் கோயம்புத்தூர் 75க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டது.  30க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள்,100க்கும் மேற்பட்ட திட்டங்கள், 4 வங்கிகள், அடுக்குமாடி குடியிருப்பு, பிளாட் வில்லாக்கள், வீட்டு மனைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. 

மேலும் இந்த ஒப்பந்தத்தில் சொத்து மதிப்பில் தள்ளுபடி சிலைகள் பதிவு கட்டண தள்ளுபடிகள் பல்வேறு வசதிகள் அல்லது தவணை திட்டங்கள் குடும்பத்தினர் தனி நபர்கள் சொத்துக்களை முன்பதிவு செய்து தங்களது கனவு இல்லத்திற்கு நல்ல விலையை பெறலாம், ஃபேர்புராவானது ஆண்டுக்கு ஆண்டு மிக முக்கியத்துவம் பெற்று வருகிறது என தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments