Breaking News

நாளைய (23-07-2024) ராசி பலன்கள் - பஞ்சாங்கம்


ஜூலை 23, 2024 பஞ்சாங்கம் • ஆடி 7

குரோதி வருடம் ஆடி 7, செவ்வாய்க்கிழமை, July 23, 2024 

திதி : 10:23 AM வரை துவிதியை பின்னர் திருதியை

நட்சத்திரம் : அவிட்டம் 08:18 PM வரை பிறகு சதயம்

யோகம் : ஆயுஷ்மான் 02:35 PM வரை, அதன் பின் சௌபாக்யம்

கரணம் : கரசை 10:23 AM வரை பிறகு வனசை 08:57 PM வரை பிறகு பத்திரை.



நட்சத்திரம்

  • அவிட்டம் - Jul 22 10:21 PM – Jul 23 08:18 PM
  • சதயம் - Jul 23 08:18 PM – Jul 24 06:14 PM

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

  • சூரியோதயம் - 5:56 AM
  • சூரியஸ்தமம் - 6:34 PM
  • சந்திரௌதயம் - Jul 23 8:32 PM
  • சந்திராஸ்தமனம் - Jul 24 8:32 AM

அசுபமான காலம்

  • இராகு - 3:24 PM – 4:59 PM
  • எமகண்டம் - 9:05 AM – 10:40 AM
  • குளிகை - 12:15 PM – 1:50 PM
  • துரமுஹுர்த்தம் - 08:27 AM – 09:18 AM, 11:07 PM – 11:52 PM
  • தியாஜ்யம் - 02:53 AM – 04:21 AM

சுபமான காலம்

  • அபிஜித் காலம் - 11:50 AM – 12:40 PM
  • அமிர்த காலம் - 10:47 AM – 12:15 PM
  • பிரம்மா முகூர்த்தம் - 04:20 AM – 05:08 AM

வாரசூலை

  • சூலம் - North  /  பரிகாரம் - பால்

சூர்யா ராசி

  • சூரியன் கடகம் ராசியில்

சந்திர ராசி

  • ஜூலை 23, 09:20 AM வரை மகரம் ராசி, பின்னர் கும்பம்

Auspicious Yogas

  • தவிபுஷ்கார யோகம் - Jul 23 05:56 AM - Jul 23 10:23 AM (Dhanishta, Tuesday and KrishnaDwitiya)

சந்திராஷ்டமம்

  • மிருகசீருஷம்,  திருவாதிரை



மேஷம் (Aries)

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திடீர் வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும். 

பரணி :  நம்பிக்கை மேம்படும். 

கிருத்திகை : கலகலப்பான நாள்.


ரிஷபம் (Taurus)

பழைய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். முயற்சி நிறைந்த நாள்.

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும். 

ரோகிணி : ஆதரவான நாள்.

மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும். 




மிதுனம் (Gemini)

வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். வர்த்தகப் பணிகளில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் தெய்வ சிந்தனை மேம்படும். சுப காரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தடைகள் மறையும் நாள்.

மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும். 

திருவாதிரை : மாற்றம் ஏற்படும்.

புனர்பூசம் :  முயற்சிகள் ஈடேறும். 


கடகம் (Cancer)

இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வர்த்தப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

புனர்பூசம் : குழப்பமான நாள்.

பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும். 


சிம்மம் (Leo)

எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். உத்தியோகத்தில் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

மகம் : மனஸ்தாபங்கள் குறையும். 

பூரம் : ஆர்வமின்மை விலகும்.

உத்திரம் : புரிதல் உண்டாகும்.



கன்னி (Virgo)

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். சகோதரர் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொருட்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும். 

அஸ்தம் : குழப்பம் விலகும். 

சித்திரை : ஆர்வம் மேம்படும்.



துலாம் (Libra)

கலைத்துறைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் புத்திகூர்மை வெளிப்படும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவு நிறைந்த நாள்.

சித்திரை : ஆர்வம் ஏற்படும். 

சுவாதி :  மாற்றம் உண்டாகும். 

விசாகம் :  விவேகத்துடன் செயல்படவும். 


 விருச்சிகம் (Scorpio)

பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை குறைப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். கடன் குறையும் நாள்.

விசாகம் : அனுபவம் ஏற்படும்.

அனுஷம் : கடனை குறைப்பீர்கள். 

கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும். 


தனுசு (Sagittarius)

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் சில நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். உபரி வருமானத்தில் முயற்சிக்கு ஏற்ப பலன்கள் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை வெளிப்படும். மேன்மை நிறைந்த நாள்.

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.   

பூராடம் :  அலைச்சல்கள் குறையும். 

உத்திராடம் : சுதந்திரத்தன்மை மேம்படும்.



மகரம் (Capricorn)

புத்திரர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இலக்கிய துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் சேமிப்புகள் குறையும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். அசதி மறையும் நாள்.

உத்திராடம் : இலக்குகள் பிறக்கும். 

திருவோணம் : சேமிப்புகள் குறையும். 

அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும். 



கும்பம் (Aquarius)

உலக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அவிட்டம் :  அனுபவம் ஏற்படும். 

சதயம் : தெளிவுகள் பிறக்கும்.

பூரட்டாதி : தாமதம் உண்டாகும். 


மீனம் (Pisces)

பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். அரசு தொடர்பான செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆதரவு நிறைந்த நாள்.

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும். 

உத்திரட்டாதி : தடைகள் நீங்கும். 

ரேவதி : அனுசரித்துச் செல்லவும். 


No comments

Thank you for your comments