Breaking News

திமுக மேயருக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயலபடும் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம்*



காஞ்சிபுரம் மாநகராட்சியில்  திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், தமாக, சுயேட்சை என‌ மொத்தம் 51 மாமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அதிமுக,பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கட்சியினரே மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக போர் கூடி தூக்கியுள்ளனர்.

மேலும் மாமன்ற கூட்டங்களை புறக்கணித்து வெளிநடப்பும் செய்த நிலையில் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் போனது.இதனிடையே கடந்த ஜனவரி மாதம் முதல் மாமன்ற கூட்டமானது நடத்தபடாமல் தற்போது இருந்து வருகிறது.

மேலும் அன்மையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திமுக மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திட திமுக உட்பட 33கவுன்சிலர்கள்  மனு அளித்திருந்தனர்.அதேபோல் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகனிடமும் அது தொடர்பாக மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் வருகிற 29ந் தேதியன்று திமுக மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டமானது நடைபெறவுள்ள நிலையில், இன்றைய தினம் திமுக மேயருக்கு எதிரான 33எதிர்ப்பு மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து மாநகராட்சி அலுவல்கத்தில் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனை முற்றுகையிட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.அதனையடுத்து ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

குறிப்பாக மாமன்ற கூட்டம் நடத்தப்படும் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்களின் வருகையை அதற்கென உள்ள வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12ந் தேதியன்று நடத்தப்பட்டு மாமன்ற கூட்டத்தில் மேயராக எதிராக போர் கொடி தூக்கிய எதிர்ப்பு மாமன்ற உறுப்பினர்கள் அக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்த நிலையில், அன்றைய தினம் நடத்தப்பட்ட மாமன்ற கூட்டத்திற்கு வருகைப் பதிவேட்டில் மாமன்ற உறுப்பினர்கள் வரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் சரமாரியாக மாநகராட்சி ஆணையரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். 

குறிபாக அன்றைய தினம் நாங்கள் கூட்டதில் கலந்து கொண்டு கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்ததை எழுத்து பூர்வமாக எழுதி தாங்கள் கையெழுத்திட்டு தர வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

 ஆனால் மாநகராட்சி ஆனையரை என்னால் எதுவும் செய்ய முடியாது அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை,வருகைப் பதிவேட்டின் அதிகாரம் மேயருக்கு தான் உள்ளது என திட்டவட்டமாக தெரிவித்து வித்தார்.

இதனையடுத்து திமுக மேயருக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக மாநகராட்சி ஆணையர் செயல்படுவதை கண்டித்து எதிர்ப்பு மாமன்ற உறுப்பினர்கள் தற்போது மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று முறை மாமன்ற கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர்கள் வரவில்லை என வருகைப் பதிவேட்டில் குறிபிட்டு இருந்தால் மாமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திடலாம்.

இந்நிலையிலேயே இரு முறை வரவில்லை என வருகைப்பதிவேட்டில் தவறாக குறிப்பிட்டுள்ளதற்கு விளக்கம் கேட்டும், அதனை சரி செய்திடவும், மாநகராட்சி ஆனையரை கண்டித்தும், ஆனையரை மாற்றிடக்கோரியும், திமுக மேயருக்கு எதிரான எதிர்ப்பு மாமன்ற உறுப்பினர்கள் 33பேர் கூட்டாக ஒன்று சேர்ந்து தற்போது இந்த காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர்கள் தெரிவித்ததாவது : 

மாநகராட்சி ஆணையர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. எதைக் கேட்டாலும் தெரியாது அதிகாரம் இல்லை என மழுப்பும் வேலையை ஆணையர் செய்து வருகிறார். 

தற்பொழுது மேயராக இருக்கும் மகாலட்சுமி மைனாரிட்டி மேயராக இருந்து வருகிறார். எனவே அவர் பதவி விலக வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

No comments

Thank you for your comments