திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (10.06.2024) மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி. திவ்யா, நகரப் பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத்தலைவர்கள் த.துர்காதேவி, ஜெயநிர்மலா, துணைஆணையர் நாரயணன், உதவி ஆணையர் சண்முகம் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
No comments
Thank you for your comments