Breaking News

வேலூர் மாவட்டத்தில் நேஷ்னல் ஜெர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஆலோசனை கூட்டம்

வேலூர் :

வேலூர் மாவட்ட நேஷ்னல் ஜெர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார், பொருளாளர் பிரபு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

 மாநில நிர்வாகி அருள்பாரி சங்கத்தின் வளர்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினார்.  சங்கத்தின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.


மாவட்டத்தில் இதர பொறுப்புகளை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாக குழு ஆலோசனை செய்து அதன்படி மாவட்ட துணை தலைவர்களாக பாலகிருஷ்ணன், சத்தியராஜ், மாவட்ட துணைச் செயலாளராக தனசேகர், இணைச் செயலாளராக செல்லபாண்டியன் மாவட்ட செய்தி தொடர்பாளராக விமல் ஆகியோர்களை ஒருமனதாக தேர்ந்தெடுத்து குழுவில் கலந்தாலோசித்து தலைமைக்கு பரிந்துரைத்து அனுப்பிவைத்தனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயம் சுதாகர்,   உறுப்பினர்கள் பூங்குன்றம்,  உசேன், கோபி, கண்ணன், முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன முடிவில் தனசேகர் நன்றி உரையாற்றினார்.

No comments

Thank you for your comments