டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வானவருக்கு அரசுப்பணி நியமன ஆணை வழங்கினார் காஞ்சிபுரம் ஆட்சியர்
காஞ்சிபுரம் :
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 பிரிவில் நேரடி உதவியாளர் பணிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சிப்பிரிவிற்கு இரு நபர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்களுக்குரிய அரசுப்பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி)ரா.ஸ்ரீதர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவளூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் வங்கி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments