Breaking News

கோவையில் அ.தி.மு.க. கோட்டை விட்டது ஏன்? - எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து அவர் தெரிவித்ததாவது,


பாராமன்ற தேர்தலில் வாக்களித்த கோவை மாவட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் மிகுந்த நன்றிகளை தெரிவித்து க்கொள்கிறோம்.கடந்த காலகட்டங்களில்  கோவையில் அதிமுக வெற்றி வாய்ப்பு இழந்துள்ளது.2019 நாடாளுமன்ற தேர்தலில் தோற்றப்பின்னரும், 2021ல் அதிமுக மீண்டும் எழுந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிறுபான்மை மக்களை தவறான பிரச்சாரத்தால் திசை திருப்பி விட்டார்கள்.அண்ணா திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகம் பேசி விட்டதாக அண்ணாமலை கூறுகிறார்,ஆனால் அதிகமாக பேசியது அண்ணாமலை தான் அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம். கூட்டணியில் இருக்கும் போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைப்பிடிக்கும் விலகினால் அவ்வளவுதான். 



நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனாலும் எங்களுக்கு எதிராக தவறான பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிணர்கள் இறங்கினார்கள். ஆனாலும் அ.தி.மு.க. நல்ல வாக்கு சதவீதத்தை பெற்று உள்ளது.2012 ஆம் ஆண்டில் 19புள்ளி 39 சதவீதம் வாக்குகளை பெற்றோம் இப்போது 20.4 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளோம்.2014யில் கோவையில் பா.ஜ.க. சார்பில்  சி.பி இராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகளை விட தற்போது அண்ணாமலை குறைவாக வாக்குகளை பெற்றுள்ளார்.பாஜக கூட்டணியை விட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்தோம் கவிழ்த்தோம் என்றே பேசுகிறார்.அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். முதலில் அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றட்டும். மத்தியில் பிரதமராக மோடி தான் பதவி ஏற்க உள்ளார். எனவே இந்த வாக்குறுதிகள் எல்லாம் அண்ணாமலை நிறைவேற்ற வேண்டும்.கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போது  ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.  அதிமுகவினர் யாரும் சோர்வடைய வில்லை மீண்டும் நாங்கள் தீவிரமாக களப்பணி ஆற்றுவோம்.மக்களை நேரடியாக சந்திப்போம் எனவே 2026 இல் பாஜக ஆட்சி அமையும் என்று அண்ணாமலை கூறுவது நடக்காது. அதிமுக தலைமை குறித்து அண்ணாமலை இனி பேச வேண்டாம். முதலில் அவரது மாநிலத்தலைவர் பதவியை அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ, பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ, மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், வி.பி. கந்தசாமி, டி.கே.அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், பாராளுமன்ற வேட்பாளர்கள் சிங்கை ஜி. ராமச்சந்திரன்,அனைத்து எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments