Breaking News

07-06-2024ம் தேதி ராசி பலன்கள்



மேஷம்

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். பழக்க வழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். தடைபட்ட கட்டிடப் பணிகள் முழுமை பெறும். சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு  நிறம் 

அஸ்வினி : நினைவாற்றல் மேம்படும். 

பரணி : மாற்றம் உண்டாகும். 

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.



ரிஷபம்

இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுப காரிய பணிகள் சாதகமாக அமையும். விவசாயத்தில் மகசூல் அதிகரிக்கும். தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனம் விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 

கிருத்திகை : பணிகள் சாதகமாகும். 

ரோகிணி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மிருகசீரிஷம் : மந்தத்தன்மை நீங்கும்.


மிதுனம்

சுப காரியம் தொடர்பான செயல்களில் அலைச்சல் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். தெய்வீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சோர்வுகள் மறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம் 

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 

திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும். 

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


 

கடகம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். உடல் நிலையில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முக்கியமான செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : சுறுசுறுப்பான நாள்.

ஆயில்யம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.



சிம்மம்

கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம் 

மகம் : மந்தத்தன்மை விலகும்.

பூரம் : அன்யோன்யம் அதிகரிக்கும். 

உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.



கன்னி

சுப காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் நவீனத்துவத்தை கையாளுவீர்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருவாய்கள் தேவைக்கு இருக்கும். தனம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம் 

உத்திரம் : தடைகள் விலகும். 

அஸ்தம் : ஆதாயம் உண்டாகும். 

சித்திரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும். 




துலாம்

முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். துணைவர் கேட்டதை வாங்கி கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். பரிவு வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் 

சித்திரை : தடைகள் விலகும். 

சுவாதி : சந்திப்புகள் உண்டாகும்.

விசாகம் : முயற்சிகள் சாதகமாகும்.



விருச்சிகம்

எதிலும் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாழ்க்கை துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் சில அலைச்சல்கள் ஏற்படும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

விசாகம் : விவேகத்துடன் செயல்படவும். 

அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.

கேட்டை : பொறுமை வேண்டும்.



தனுசு

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலா செல்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் மறையும். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

மூலம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 

பூராடம் : வெற்றிகரமான நாள்.

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.



மகரம்

வெளியூரில் உள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பயணங்களால் உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பகை விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் 

உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : ஆரோக்கியம் மேம்படும்.

அவிட்டம் : சோர்வுகள் உண்டாகும்.



கும்பம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். கலைப் பொருட்களை வாங்குவீர்கள். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். இறை பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் சாதகமாக அமையும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : ஈடுபாடு ஏற்படும். 

பூரட்டாதி : புரிதல் அதிகரிக்கும்.



மீனம்

இனம்புரியாத சில சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். உறவினர்களால் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தோல்விகள் விலகும் நாள்.

பூரட்டாதி : சோர்வான நாள்.

உத்திரட்டாதி : உழைப்பு அதிகரிக்கும்.

ரேவதி : பொறுமை வேண்டும்.


No comments

Thank you for your comments