Breaking News

ஸ்டார் ஹோட்டலை மிஞ்சிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறை


  • தமிழகத்திலேயே முதல் முறையாக சின்ன காஞ்சிபுரம் அரசு பள்ளியில் பைவ் ஸ்டார் ஹோட்டலை மிஞ்சக்கூடிய வகையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை திறப்பு.
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட அதி நவீன கழிவறையை காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் திறந்து வைத்தார்.



அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்களை  நாடு முழுவதும் உள்ள மாநிலங்களும் பின்பற்றி  நடைமுறைப்படுத்தி வருகின்றன.




அந்த வகையில் சின்ன காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய அளவிற்கு சுகாதாரமான கழிவறைகள் இல்லை என்பதால் கழிவறைகள் அமைத்து தர வேண்டும் என காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனிடம் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் நிதியின் கீழ் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் கழிவறைகளை கட்டித்தர அனுமதி அளித்தார்.

அதன்படி சின்ன காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழகத்திலேயே முதன்முறையாக 5 ஸ்டார் ஹோட்டலையும் மிஞ்சக்கூடிய வகையில் அதே நவீனமான கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டது.

கழிவறைக்குச் செல்லும் மாணவிகள் பயன்படுத்த வெஸ்டர்ன் டாய்லெட்,கை கால்களை கழுவ தானியங்கு சென்சார் குழாய்களும், கைகளை உலர்த்த கருவியும், முகம் பார்க்க கண்ணாடி, சானிட்டரி நாப்கின்களை சுகாதாரமான முறையில் அழிக்க இயந்திரமும், மேலும் மின்சாரம் இல்லை என்றாலும் இயங்கும் வகையில் சோலார் சிஸ்டமும் அமைக்கப்பட்டு 5 ஸ்டார் ஹோட்டல்களை மிஞ்சக்கூடிய வகையில்   அரசுப் பள்ளி டாய்லெட்டில் இவ்வளவு வசதிகளா என ஆச்சரியப்படத்தக்க வகையில் தனித்தனியாக 21 கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வேறு எங்கும் இல்லாத வகையில் முன்மாதிரியாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட புதிய அதிநவீன கழிவறை வளாகத்தை காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன், ரிப்பன் வெட்டி பள்ளி மாணவிகளின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெய்சங்கர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி ஆசிரியைகளும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments