வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி - பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார் மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம், ஜூன் 19-
வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியின் போது கிராம மக்கள் பலரிடமிருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
மாகறல் உள்வட்டத்தை சேர்ந்த கம்பராஜபுரம், சித்தாத்தூர், இளையனார் வேலூர், ஆசூர், கொளத்தூர், கீழ்ப்புத்தூர், மேல்புத்தூர், நெல்வேலி, தம்மனூர், அவளூர், அங்கம்பாக்கம், களக்காட்டூர், குருவிமலை, விச்சந்தாங்கல், வேடல், பெரமநல்லூர், காலூர், பெரியநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து வாலாஜாபாத் அரசு மருத்துவமனையை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments