நீலம்பூரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் நீலம்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவில் மகா சம்ப்ரோக்ஷனா மகா கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழா கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கி பட்டிண பிரவேசம், முலைப்பாளிகை, திருவீதி உலா, மங்கள வாத்தியங்கள் முழங்க தாயார் அழைப்பு, தீர்த்த கரகம், பால் கரகம், திருவீதி உலா வருதல் நாமசங்கீர்த்தனம் பஜனை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து ஜூன் 9ம் தேதி காலை மகா கும்பாபிஷேக திருவிழா, திருக்கல்யாண உற்சவம், மற்றும் மகா அன்னதானமும் நடைபெற்றது.
மேலும் ஸ்ரீ மாயம் பெருமாள் சாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவ வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பல்வேறு தாசர்கள் வருகை புரிந்து கலசத்தின் மீது புண்ணிய தீர்த்தம் ஊற்றும் போது செண்டை அடித்து, சங்கு நாதம் முழங்கினார்கள்.
பக்தர்களின் "கோவிந்தா கோவிந்தா" என்ற கோசம் உணர்ச்சிகரமாக அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இதில் திரளான சூரிய குல பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்த்தங்கள் பெற்று சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தலைவர் செம்பான், செயலாளர் குப்புராஜ், பொருளாளர் சின்னதுரை, துணைத் தலைவர் தமிழ்செல்வன், துணைச் செயலாளர் கருப்புசாமி, துணை பொருளாளர் தர்மராஜ் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் வேலுச்சாமி, மயில்சாமி, ஈஸ்வரமூர்த்தி, ரவிக்குமார், துரைசாமி மேலும் பல்வேறு திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் சூரிய குல பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டு செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments