கோவையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திமுகவில் இணைவு
கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திமுகவில் இணைந்தனர்.
கோவை மாவட்டம், திமுக தலைமை அலுவலகத்தில் வடக்கு மாவட்ட மாணவர் அணி திமுக சார்பில் என்.ஜி.பி.கல்லூரி, கிருஷ்ணா கல்லூரி, கற்பகம் கல்லூரி, கே.பி.ஆர்.கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமையில், வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல் ஆகியோர் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் மாணவர் மன்றம் உருவாக்குவது பற்றியும், எப்படி கல்லூரிகளில் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இறுதியாக மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞா.சிவகுமார் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments
Thank you for your comments