Breaking News

திமுக முப்பெரும் விழாவுக்கான அரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் முத்துசாமி.

கோவை, ஜூன் 10-

கோவையில் வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான அரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் முத்துசாமி.


தமிழக முதல்வர் பாராட்டு விழா, கலைஞருக்கு நூற்றாண்டு நிறைவு விழா, தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா ஜூன் 15 தேதி கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பூமி பூஜை  நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு விழாவிற்கான பணிகளைத் துவக்கி வைத்தார்.   கோவை மாநகர் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக மாவட்டச் செயலாளர்கள் தொ.அ.ரவி, தளபதி முருகேசன்,கழக சொத்துப்பாதுகாப்புக்குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி,மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எம்.தண்டபாணி,பி.ஆர்.அருள்மொழி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து,கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல் கலந்துகொண்டனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் ராஜேந்திரன், ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.மணிகண்டன்,  முருகன், ஆடிட்டர் வெ.சசிகுமார், ம.மகுடபதி, ரகு துரைராஜ், பகுதிச் செயலாளர்கள் துரை.செந்தமிழ்செல்வன்,ப.பசுபதி,சிவா,மார்க்கெட் எம்.மனோகரன், அஞ்சுகம்பழனியப்பன், வி.ஐ.பதுருதீன்,  ஆர்.எம்.சேதுராமன், வ.ம.சண்முகசுந்தரம், கே.பாக்கியராஜ், கே.எம்.ரவி,  எ.எம்.கிருஷ்ணராஜூ கார்த்திக் செல்வராஜ், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, சாந்தி முருகன்,வி.பி.முபசீரா, அணிகளின் அமைப்பாளர்கள் இரா.தனபால், அக்ரி பாலு, அன்புச் செழியன்,ஆர்.கே.  சுரேஷ்குமார், சிவப்பிரகாஷ், வி.மணி, கராத்தே அர்ஜூனன், தி.கண்ணன், நா.பாபு, கோவை அபு, ராஜ்குமார், சஞ்சய், அன்னம்மாள் ex MC.,வட்டக் கழகச் செயலாளர்கள் ஏ.எஸ்.நடராஜ்,டவுன் பா.ஆனந்த், கே.ஆனந்தகுமார், ப.ப.சிவகுமார், பிரவீன்  மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஆர்.விஜயராகவன்,  கேசவன் ex.mc. அன்னூர் சுப்பிரமணியம், அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments