ஊழல்கள் அதிகமானதுக்குக் காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல..... -கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
இந்தியன் - 2 அனுபவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் - 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இன்று நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், ”இந்தியன் - 2 படத்திற்கான கருவைக் கொடுத்ததற்கு அரசியலுக்கு நன்றி. நாட்டில் ஊழல் அதிகமானதால்தான் இந்தியன் தாத்தாவின் வருகைக்கு அர்த்தம் சேர்ந்திருக்கிறது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய எவரும் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்ததுபோல் தெரியவில்லை. சந்தோசமாகப் பணியாற்றியுள்ளனர்.
நானும், இயக்குநர் ஷங்கரும் மீண்டும் நினைத்தாலும் இதுபோல் திரைப்படத்தை எடுக்க முடியாது என ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சொன்னார். எடுத்திருக்கிறோம்.
அதுதான் இந்தியன் - 3. நாட்டில் ஊழல்கள் அதிகமானதுக்குக் காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல நாமும்தான். ” எனக் கூறினார்.
No comments
Thank you for your comments