Breaking News

மத்திய அரசின்கீழ் செயல்படும் கிராமிய வங்கிகளில் வேலை.... 9,995 காலியிடங்கள் - Last Date : 27-06-2024

மத்திய அரசின்கீழ் செயல்படும் பல்வேறு கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள 9,995 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூன் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS)

பணிகள்:  Office Assistant, Officer Scale-I, Officer Scale -II, (Group-B,Group-A)

காலியிடங்கள்:  9,995

பணி:  Office Assistant (Multipurpose,Group-B)

வயதுவரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Officer Scale-I(Assistant Manager, Group-A)

வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Officer Scale -II(Specialist Officers(Manager, Group-A)

வயதுவரம்பு: 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எலக்ட்ரானிக்ஸ், தொடர்பியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer Scale-II(General Banking,Group-A)

வயதுவரம்பு: 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயம், தோட்டக்கலை, பால்பண்ணை, கால்நடை பராமரிப்பு, வனவியல், கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer Scale-III (Senior Manager, Manager, Group-A)

வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வங்கியியல், நிதியியல், சந்தையியல், விவசாயம், தோட்டக்கலை, பால்பண்ணை, கால்நடை பராமரிப்பு, வனவியல், கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தையியல் மற்றும் கூட்டுறவியல், மேலாண்மை, ஐடி, சட்டம், பொருளாதாரம், கணிதவியல் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் இரண்டு ஆண்டுகளும், முதுநிலை மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை: அரசு விதிகளின்படி 1.6.2024 தேதியின்படி கணக்கிடப்பட்டு ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு பத்து ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: குரூப்-பி பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குரூப்-ஏ பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அலுவலர் ஸ்கேல்-I மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வங்கி பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம், நேரம், மதிப்பெண் விவரம், வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் மாதம்: ஆகஸ்ட். செப்டம்பர்-2024

முதன்மைத் தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர்-2024

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.850, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.175. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.6.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.ibps.in/

Recruitment Notification :  https://www.ibps.in/index.php/recruitment/









No comments

Thank you for your comments