கிளார் அரசுப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் திறப்பு விழா
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் அருகேயுள்ள கிளார் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.21லட்சம் மதிப்பிலான இரு புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாமல் அருகேயுள்ள கிளார் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இரு புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டும் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனமும் நிறுவப்பட்டது.
புதிய வகுப்பறைக் கட்டிடங்களை சென்னையை சேர்ந்த பெட்ரோவேக் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் உதவிப் பொதுமேலாளர் சத்தியமூர்த்தி திறந்து வைத்தார். நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து இப்புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டப்பட்டதாகவும்,மாணவர்கள் உயர்ந்த இலக்குகளை உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் தன்னம்பிக்கையாக பேசினார்.
நிகழ்வுக்கு கிளார் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயசங்கர்,மாவட்டக்கல்வி அலுவலர் ஆர்.சொர்ணலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.சிவகாமவள்ளி வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியை கௌரி நன்றி கூறினார்.
படவிளக்கம்: கிளார் அரசுப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடங்களை திறந்து வைத்து மாணவர்களிடம் பேசினார் சென்னை பெட்ரோவேக் இன்ஜினியரிங் நிறுவனத்தின் உதவிப் பொதுமேலாளர் சத்தியமூர்த்தி
No comments
Thank you for your comments