19-06-2024-ம் தேதி ராசி பலன்கள்
மேஷம்
விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு
சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது
தெளிவை ஏற்படுத்தும். வேலையாட்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர்
அதிகாரிகளிடத்தில் புரிதலின்மை உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது
நல்லது. பக்தி மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : சச்சரவுகள் நீங்கும்.
பரணி : தெளிவான நாள்.
கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.
ரிஷபம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். துணைவர் வழியில் மதிப்பு உண்டாகும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை
உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை
ஏற்படும். அரசு விஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பிரச்சனைகளுக்கு தெளிவான
முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். நெருக்கடியாக
இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நன்மை
நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.
திருவாதிரை : முடிவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மதிப்புகள் கிடைக்கும்.
கடகம்
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிலும் சிக்கனமாக
செயல்படுவீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களை
மாற்றும் விஷயங்களில் பொறுமை வேண்டும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து
கொள்வீர்கள். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். நேர்மை நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : சிக்கனமாக செயல்படுவீர்கள்.
பூசம் : பொறுமை வேண்டும்.
ஆயில்யம் : விவேகத்துடன் செயல்படவும்.
சிம்மம்
விவசாயப் பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில பணிகளை செய்து
முடிப்பீர்கள். பாடங்களில் இருந்துவந்த
தெளிவின்மை விலகும். ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும்.
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி
கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : தெளிவின்மை விலகும்.
உத்திரம் : சூழ்ச்சிகளை அறிவீர்கள்.
கன்னி
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
பாகப்பிரிவினைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின்
அறிமுகம் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிலும் துணிச்சலோடு
செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைக்கான மதிப்பு கிடைக்கும். எதிர்ப்பு விலகும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : முடிவுகள் கிடைக்கும்.
அஸ்தம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
சித்திரை : மதிப்புகள் கிடைக்கும்.
துலாம்
நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த
உதவிகள் கிடைக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை
சிலருக்கு உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். அதிகாரிகளிடத்தில்
மதிப்புகள் உயரும். எதிர்பாராத சில மாற்றங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும்.
அலைச்சல் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : அத்தியாயம் பிறக்கும்.
விருச்சிகம்
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் தாழ்வு
மனப்பான்மை இன்றி செயல்படவும். தோற்ற பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். புதிய
முதலீடுகளில் ஆலோசனை பெறவும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலக
பணிகளில் கவனம் வேண்டும். சந்தோஷம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : ஆலோசனை பெறவும்.
கேட்டை : பணிகளில் கவனம்.
தனுசு
ஒரு சில விஷயங்களால் மனதில் குழப்பம் ஏற்படும். பூர்வீக
சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து
முடிவெடுக்கவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில
வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.
நினைத்த பணிகள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
மூலம் : குழப்பமான நாள்.
பூராடம் : விவேகம் வேண்டும்.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
மகரம்
எதையும் சமாளிப்பதற்கான பக்குவம் பிறக்கும். பொது காரியங்களில்
தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை
உண்டாக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி
பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். விருப்பம்
நிறைவேறும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : பக்குவம் பிறக்கும்.
திருவோணம் : மாற்றம் பிறக்கும்.
அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
கும்பம்
வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். சுப
காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். புதுவிதமான இடங்களுக்கு சென்று
வருவீர்கள். தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் வரவுகள் ஏற்படும். எந்த
ஒரு விஷயத்திலும் அவரசமின்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் மேன்மை
உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அவிட்டம் : தடைகள் விலகும்.
சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
மீனம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம்
அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பாகப் பிரிவினைகளில்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும்.
அலுவலகத்தில் முயற்சிக்கான பொறுப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த
குழப்பம் விலகும். பாசம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : பொன்நிறம்.
பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.
உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரேவதி : குழப்பங்கள் விலகும்.
No comments
Thank you for your comments