காஞ்சிபுரத்தில் தேர்தலை சிறப்பாக நடத்தியவர்களுக்கு பாராட்டு விழா
காஞ்சிபுரம், ஜூன் 8:
காஞ்சிபுரத்தில் மக்களவைத் தேர்தல் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்தவர்களுக்கு கோட்டாட்சியர் மு.கலைவாணி தலைமையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவும்,வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெற்றது.
வாக்குப்பதிவு தொடங்கிய நாளிலிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை எந்தவித அசம்பாவிதமோ அல்லது குறைபாடுகளோ இல்லாமல் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது.இதற்கு காரணமானவர்களுக்கு பாராட்டு விழா காஞ்சிபுரம் கோட்டாட்சியர் மு.கலைவாணி தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.வட்டாட்சியர் புவனேசுவரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் மு.கலைவாணி பேசுகையில் நான் சந்தித்த முதல் தேர்தல் பணியாக இருந்தது.தேர்தல் அலுவலர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள்,துப்புரவுப்பணியாளர்கள் உட்பட அனைவரும் சிறப்பாக பணியாற்றியதால் தான் தேர்தலை சிறப்பாக நடத்த முடிந்தது.ஒரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூட பழுதாகவும் இல்லை.தேர்தல் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.
விழாவில் தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கினார். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கோட்டாட்சியருக்கு சிறந்த தலைமையின் கீழ் செயல்பட்டதாக கூறி சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கினர்.
படவிளக்கம் : காஞ்சிபுரம் கோட்டாட்சியருக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கிய தேர்தல் அலுவலர்களாக பணியாற்றிய பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள்
No comments
Thank you for your comments