காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றத்தில் 292 பயனாளிகளுக்கு தீர்வு - ரூ.12.46 லட்சம் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டது
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 292 பயனாளிகளுக்கு ரூ.12,46,85,211 இழப்பீட்டுத் தொகையாக முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி வழங்கினார்.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி தலைமையில் கூடியது.
தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா,தலைமைக்குற்றவியல் நீதிபதி எம்.வசந்தகுமார்,கூடுதல் சார்பு நீதிபதி டி.திருமால்,முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.டி.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குற்றவியல் நீதிபதி இனியா கருணாகரன் வரவேற்று பேசினார்.
மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள்,மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வராக்கடன் வழக்கு,நில ஆர்ஜித வழக்கு ஆகியன உட்படமொத்தம் 1800 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 292 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதன் மூலம் 292 பயனாளிகளுக்கு முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி ரூ.12,46,85,211 இழப்பீட்டுத் தொகையாக வழங்கினார்.முன்னதாக மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவில் வழக்குரைஞர்கள் பத்மனாபன், சத்தியமூர்த்தி, கீதா, விநாயகம், கோவிந்தசாமி, பரணி மற்றும் காப்பீட்டு நிறுவன வழக்குரைஞர்கள்,வழக்காடிகள்,பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments