Breaking News

குழந்தைகள் நலத்துறையில் ரூ.18,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தகவல் பகுப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள்அ பாதுகாப்புப் பிரிவின் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தகவல் பகுப்பாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி அறிவியல்(பிசிஏ) போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி சார்ந்த பணிகளில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 42 வயதிற்குட்டவர்களாக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,536 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.virudhunagar.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள், சமீபத்திய புகைப்படத்துடன் வரும் 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 - வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர்-626 003. தொலைபேசி எண்.04562-293946 என்ற அஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட வேண்டும்.

Recruitment Notification : https://virudhunagar.nic.in/notice_category/recruitment/

No comments

Thank you for your comments