Breaking News

காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ. 62.97 லட்சம்; 193 கிராம் தங்கம்

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது.


அதன்படி, கோவிலில் உள்ள உண்டியல்கள்  திறக்கப்பட்டு, கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டது.

இதில் 62 லட்சத்து 97 ஆயிரத்து 246 ரூபாய் ரொக்கமும், 193 கிராம் தங்கமும், 559 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments