வேலூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு!
வேலூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் வேலூர் ஏலகிரி அரங்கில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
தேர்தல் அலுவலர்களான ஆவடி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர். பென்சிலய்யா, செயலாளர் கே. ஆர். தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதில் வேலூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக எஸ். சரவணன், செயலாளராக எம். குமரவேல், பொருளாளராக வி. சீனிவாசன் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாநகராட்சியின் பல்வேறு துறைகளின் சங்க நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் வேலூர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் மாநகராட்சி 13 சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments