Breaking News

எஸ்எஸ்சி மாஸ் அப்டேட் - 17 ஆயிரம் காலி பணியிடங்கள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் சி பிரிவில் காலியாக உள்ள 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம்.


எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற முழு வீச்சில் தேர்வர்கள் படித்தும் வருகிறார்கள். இந்த நிலையில், 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்: எஸ்.எஸ்.சி SSC (CGL) வெளியிட்ட அறிவிப்பின் படி மத்திய அரசு துறைகளில் இருக்கும் குரூப் பி மற்றும் சி பிரிவு பணியிடங்கள் நிரப்பப்படும். மொத்தம் 17,727 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியை பொறுத்தவரை எதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்க்கு விண்ணப்பிக்கலாம்.


கல்வி தகுதி: 18 - 27 வயதுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. 

சம்பளத்தை பொறுத்தவரை ரூ.44,900 - 1,42,400, ரூ. 35,400 - 1,12,400, ரூ29,200 - 92,300 மற்றும் ரூ.25,500 - 81,100 என பணியிடங்களுக்கு ஏற்ப வழங்கப்படும்.

தேர்வு முறை: Tier 1 & Tier 2 இரண்டு நிலை தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் Tier 1 தேர்வு, டிசம்பர் 2024-க்குள் Tier 2 தேர்வும் நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்டவை தேர்வு அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பிற்கான இணையதள முகவரியை கிளிக் செய்து தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். இரண்டு தேர்வுகளுமே கணிணி வழி தேர்வாகவே நடைபெறும். முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள் 24-07-2024 ஆகும். ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. அதேபோல், எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கும் தேர்வு கட்டணம் கிடையாது.

தேர்வு நடைபெறும் நகரங்கள்: தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தேர்வுக்கு விண்ண்ப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தேர்வு அறிவிப்பின தெரிந்து கொள்ள https://ssc.gov.in/ இங்கே கிளிக் செய்யவும்.

Click here to View the Notification PDF: 👉 https://ssc.gov.in 

 

 

Embedded Website

Notice of Combined Graduate Level Examination 2024

Notification :

No comments

Thank you for your comments