Breaking News

220 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த நடிகர் அஜித்

துபாய் பந்தய களத்தில் சீறிப்பாயந்த அஜித் - வேற லெவல் வீடியோ வெளியீடு. இதில் நடிகர் அஜித் பி.எம்.டபிள்யூ. காரில் 220 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்தார்.


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் துபாய் பந்தயகளத்தில் கார் ஓட்டிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. வீடியோவில் கார்களை உற்று நோக்கும் அஜித், பிறகு அதனை களத்தில் வைத்து வேகமாக ஓட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முதலில் பி.எம்.டபிள்யூ. காரை ஓட்டி மகிழ்ந்த அஜித்குமார் அடுத்ததாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பி.எம்.டபிள்யூ. காரில் பந்தய களத்தை வலம்வந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.




No comments

Thank you for your comments