உத்தரமேரூரில் உலக பட்டினி தினம் அனுஷ்டிப்பு - தமிழக வெற்றிக் கழகத்தினர் அன்னதானம்
படவிளக்கம் : உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்
காஞ்சிபுரம், மே 28:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உலக பட்டினி தினத்தை அனுஷ்டிப்பதற்காக பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் உலக பட்டினி தினம் அனுஷ்டிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளை உலக நாடுகள் சரி செய்யவும் உலக பட்டினி தினம் ஆண்டு தோறும் மே.28 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி கழகத்தின் தலைவரும், நிறுவனருôன விஜய் அறிவுரையின்படி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கழகத்தின் கிழக்கு ஒன்றியத் தலைவர் ரஞ்சித் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.மாவட்ட தலைவர் தென்னரசு, மாவட்ட மாணவரணி தலைவர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடக்கி வைத்தனர்.
மகளிர் அணித் தலைவி சித்ரா,சாலவாக்கம் தெற்கு ஒன்றியத்தின் தலைவர் பிரதீபன், நிர்வாகிகள் சந்தோஷ்,ராஜசேகரன் ஆகியோர் உட்பட பலரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments