Breaking News

இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில் நபார்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

படவிளக்கம்  : காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடிய நபார்டு வங்கி அதிகாரிகள்

காஞ்சிபுரம், மே 28:

காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுய தொழில் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நபார்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

காஞ்சிபுரம் நகரில் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம்.இம்மையத்தில் சுயதொழில் பயிற்சிகள் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள், உணவு ஆகிய அனைத்தும் இலவசமாக கற்றுத்தரப்படுகிறது.

இப்பயிற்சி மையத்திற்கு நபார்டு வங்கி சார்பில் கடந்த ஆண்டு ரூ.4.50லட்சம் மதிப்பில் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நபார்டு வங்கியின் துணைப் பொது மேலாளர் அஜய்.கே.சூட்,தலைமைப் பொது மேலாளர்கள் ஆர்.சங்கர நாராயணன், ஆர்.ஆனந்த், துணைப் பொது மேலாளர் எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பயிற்சியின் போது தையல் பயிற்சி செய்து கொண்டிருந்த பயிற்சியாளர்களிடம் மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

முன்னதாக நபார்டு வங்கி மேலாளர்களை காஞ்சிபுரம் மண்டல துணை மேலாளர் எம்.விஜய் நேகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திலீப்,பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர்.உமாபதி ஆகியோர் வரவேற்றனர்.


No comments

Thank you for your comments