Breaking News

தேசிய யோகா போட்டியில் காஞ்சிபுரம் மாணவருக்கு தங்கப்பதக்கம்

காஞ்சிபுரம்,மே 27:

தாய்லாந்தில் நடைபெற்ற தேசிய யோகா போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர் கார்த்திக் நாராயணன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதாக அவரது பயிற்சியாளர் சுதர்சன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தங்கப்பதக்கம் வென்ற மாணவர் கார்த்திக் நாராயணன்

தாய்லாந்தின் பாங்காங்கில் 3 வது தேசிய யோகா விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் தென்கொரியா,ஸ்ரீ லங்கா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா உட்பட 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற காஞ்சிபுரம் சிஷ்ய யோகா மையத்தின் மாணவர் கார்த்திக் நாராயணன் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

இத்தகவலை அவரது யோகா ஆசிரியரும்,பயிற்சியாளருமான சுதர்சன் தெரிவித்துள்ளார். தங்கம் வென்ற கார்த்திக் நாராயணனை இந்திய தூதரக உறுப்பினர் முத்து உட்பட பலரும் பாராட்டினார்கள்.


No comments

Thank you for your comments