காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் 4 சுவைகளுடன் கொத்து கொத்தாய் தொங்கும் மாங்காய்கள் - ஆர்வத்துடன் பார்த்து செல்லும் வெளியூர் மக்கள்
படவிளக்கம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலில் 4 சுவைகளுடன் மாங்காய்கள் காய்த்து தொங்கும் ஸ்தல விருட்சமான மாமரம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் சுமார் 3500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான மாமரத்தில் 4 சுவைகளுடன் மாங்காய்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குவதை புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில்.இக்கோயிலில் பார்வதி தேவி சிவனுக்கு மணலால் லிங்கம் அமைத்து இம்மாமரத்தின் அடியில் அமர்ந்து சிவனை பூஜை செய்த பெருமைக்குரியது.
ஸ்தலவிருட்சமாக இருந்து வரும் இம்மாமரத்தின் அடியில் ஏலவார்குழலி அம்மையும், ஏகாம்பரநாதரும், சோமஸ்கந்தரும் அருள்பாலித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் இம்மாமரத்தில் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் 4 சுவைகளை தரக்கூடிய 4 வகையான மாங்காய்கள் காய்ப்பது வழக்கம்.
நிகழாண்டு சீசன் தொடங்கியுள்ள நிலையில் இம்மாமரத்தில் மாங்காய்கள் 4 புறமும் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.
வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மாமரத்தின் அடியில் உள்ள சிவன், பார்வதி மற்றும் சோமாஸ்கந்தரை வழிபடுவதோடு மாமரத்தில் காய்த்து தொங்கும் மாங்காய்களையும் ஆர்வத்துடன் வியந்து பார்த்து செல்கின்றனர்.
No comments
Thank you for your comments