கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகை முன்பு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் கோடை வெயிலின் தாகம் தீர்க்கும் வகையில் மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி பகுதி செயலாளர் சந்துரு தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சி தெற்கு மாவட்ட துணை செயலாளரும் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினருமான க.செல்வம் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார்.இதில் சிறுபான்மை அணி துணை தலைவர் இ.ஜாபர், இணைத் தலைவர் தாமஸ்,மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம்,
மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்செல்வன், பகுதி செயலாளர் வெங்கடேசன்,மாநகர துணை செயலாளர் ஜெகன்நாதன், ஒன்றிய செயலாளர்கள் படுநெல்லி பாபு,க.குமணன், மாவட்ட தொண்டரணி ஜெய்,
வட்ட செயலாளர்கள் சங்கர்,பிரசாந்த்,மாநகர மாணவரணி கீர்த்திவாசன், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments