விவசாயிகளுக்கு தலா ரூ.12.50லட்சம் மதிப்பில் இரு சரக்கு லாரிகளை நபார்டு வங்கி வழங்கியது
படவிளக்கம் : விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சரக்கு லாரியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் நபார்டு வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் அஜய் கே.சூட்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தை அடுத்த களியனூரில் விவசாயிகள் இருவருக்கு தலா ரூ.12.50 லட்சம் மதிப்பிலான சரக்கு லாரிகளை வியாழக்கிழமை நபார்டு வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் அஜய்.கே.சூட் வழங்கினார்.
காஞ்சிபுரம் அருகேயுள்ள களியனூரில் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் 60 பேருக்கு குறுநிதித்துறை சார்பில் அதில் பணியாற்றுவதற்கான பயிற்சி நபார்டு வங்கி உதவியுடன் நடைபெற்றது.
நபார்டு வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் அஜய் சூட் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
இதனையடுத்து விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் தலா ரூ.12.50லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.25லட்சம் மதிப்பிலான இரு சரக்கு லாரிகளையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்வில் நபார்டு வங்கியின் முதுநிலை பொதுமேலாளர்கள் சங்கரநாராயணன், ஆனந்த் சோமசுந்தரம், மாவட்ட வளர்ச்சி அலுவலர் விஜய் நிஹார், வேளாண்மை இணை இயக்குநர் ராஜ்குமார், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கல்பனாசங்கர், அறங்காவலர் கிருஷ்ணன், முதன்மை செயலக அலுவலர் கொண்டா.ராதா கிருஷ்ணன், அகாதெமி இயக்குநர் சந்திரசேகர் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக பயிற்சி அகாதெமியின் தலைவர் ஜோ நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments