Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் திறக்காத அவல நிலை

 திருவள்ளூர், ஏப்.29-

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. இந்த 10 தொகுதிகளிலும்  முன்னாள் மறைந்த முதல்வர்கள் மு.கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா அவர்கள் இருக்கும்பொழுது இரு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.இதனால் பொதுமக்களும் சிரமமின்றி தாகத்திற்கு தண்ணீர் குடித்து சென்றனர்.


வரலாறு காணாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கும் இந்த ஆண்டில் தற்பொழுது தண்ணீர் பந்தலை திறக்க யாரும் முன்வராத அவல நிலை நீடிக்கிறது.  

வழக்கத்துக்கு மாறாக வரலாறு காணாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்க யாரும் முன் வரவில்லை என்று பொதுமக்களும் சமூக ஆர்வலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை எப்போது வந்ததோ அப்போதே தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சிகள் படிப்படியாக குறைந்து இந்த ஆண்டு முற்றிலுமாக கைவிடப்பட்டது.

இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் டாக்டர் கா.குமார் அவர்களிடம்,  மாநில நிர்வாகி ஜெ.பிரேம் குமார் தெரிவித்ததன்பேரில், பொதுமக்களின் நலனை கருதி உடனடியாக ஆவடி மாநகராட்சி அருகில் மாநில நிர்வாகி ஜெ.பிரேம்குமார் தலைமையில், விரைவில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்படும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments