Breaking News

அரிசிக்கு விதித்துள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற கோரிக்கை

திருச்சி, ஏப்.29-

மத்திய ஜி எஸ் டி கவுன்சில் அரிசிக்கு விதித்துள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற கோரிக்கை தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் - அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் - அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு விதித்துள்ள ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும், எண்ணெய் ஆலைகளுக்கு அரிசி ஆலையில் இருந்து அனுப்பும் தவிடுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், தமிழக அரசு நெல்லிற்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணம் வசூல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் டாக்டர் ஏசி மோகன், பொருளாளர் கணேச அருணகிரி, திருச்சி மாவட்ட தலைவர் சின்னமுத்து மற்றும் அரிசி ஆலை, அரிசி மற்றும் நெல் மொத்த கொள்முதல் வியாபாரிகள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments