Breaking News

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மைத் தலைமை இயக்குநராக ஷெய்பாலி ஷரண் பொறுப்பேற்றார்

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மைத் தலைமை இயக்குநராக திருமதி ஷெய்பாலி ஷரண் பொறுப்பேற்றார்


பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக இருந்த திரு மணீஷ் தேசாய், நேற்று ஓய்வு பெற்றதையடுத்து, திருமதி ஷெய்பாலி பி. ஷரண் இன்று, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார். திருமதி ஷரண் 1990 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்தியத் தகவல் பணி அதிகாரி ஆவார்.


மூன்று தசாப்தங்களாக நீடித்த சிறப்புமிக்க பணியில், நிதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் போன்ற அமைச்சகங்களுக்கான பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரியாக, பெரும்பாலும் ஊடக விளம்பரப் பணிகளை கவனிக்கும் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

கூடுதலாக, சுகாதார அமைச்சகத்தின் (பாரம்பரிய மருத்துவ முறைகள் / ஆயுஷ் துறை (2002-2007)) இயக்குநராக அவர் பணிபுரிந்துள்ளார். நிதி அமைச்சகத்தில் (பொருளாதார விவகாரங்கள் துறை 2013-2017) இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். மேலும் (தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் தகவல் கொள்கை, 2000-2002) சிறப்புப் பணி  அதிகாரி (ஓ.எஸ்.டி) பதவியிலும், 2007 முதல் 2008 வரை மக்களவை செயலகத்தில் லோக் சபா தொலைக்காட்சியின் நிர்வாகம் மற்றும் நிதி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

திருமதி ஷரண் பொறுப்பேற்றதும், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.


No comments

Thank you for your comments