Breaking News

ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா

திருச்சி, ஏப்.29-

திருச்சி திருவானைக் காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் 27-வது ஆண்டு விழா விளையாட்டு மற்றும் கலை ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 



கல்லூரி தாளாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பிச்சைமணி ஆண்டு அறிக்கையும், உடற்கல்வி இயக்குனர் கருப்பையா விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையும், கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் பிரபு கலைத்துறை ஆண்டறிக்கையும் சமர்ப்பித்தனர். 

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி மணப்பாறை சுந்தரம் கல்வி விளையாட்டு மற்றும் கலைகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டியதில்லை, சுதந்திரமாக வாழ வேண்டும், ஏராளமான தலைவர்கள் பலவிதமான இன்னல்களை அனுபவித்து பல்வேறு தியாகங்கள் செய்து சுதந்திரத்தை பெற்று தந்த இந்த இந்திய பூமியில் இளைஞர்கள் நன்று கல்வி பயின்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். 

சாதி, மத வேறுபாடு இன்றி சிறந்த சமுதாயம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும். இளைய சமுதாயம் பிறகு வரும் சமுதாயத்தினருக்கு நல்ல வழிகாட்டிகளாக விளங்க வேண்டும் என்று பேசினார். 

இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர். முதுநிலை துணை முதல்வர் ஜோதி இறுதியாக அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments