Breaking News

100% வாக்களிக்க வேண்டும் உறுதிமொழி - தேர்தல் விழிப்புணர்வு பேரணி



 2024-ம் ஆண்டு எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) பொதுமக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில், 100% வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வைத்து பிரச்சாரம் செய்தல், மாணவ/ மாணவர்களுக்கு கலாச்சார போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், அரசு களப்பணியாளர்களை கொண்டு பொதுமக்களின் வீட்டிற்கே சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உறுதிமொழி எடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வாக்குபதிவு செய்துவது குறித்து விழிப்புணர்வு அளித்தல், சுயஉதவிக்குழுக்களை கொண்டு மாவட்ட அளவில் ரங்கோலி போட்டிகள் நடத்துதல் மனித சங்கலி, பைக் பேரணி போன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி,  காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி சார்பில், ஊழியர்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டும், பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்  ஒட்டுவில்லைகள் (STICKER)  ஒட்டியும், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார்கள். 

அதேபோல் காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் கோலங்கள் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமாங்காடு கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின், அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் 100%  வாக்குபதிவு குறித்த தேர்தல் ஆணையத்தின் குறும்படங்கள் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments