100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கலைச்செல்வி மோகன் பிரசுரங்களை வழங்கினார்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழம்பியில், இன்று (03.04.2024) 2024 - பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ,ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
நடைபெறவிருக்கும் 2024 - பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழம்பியில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விளம்பர விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 100% வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சாலையோர கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கும், பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, தூய்மை பணியாளர்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்கள்.
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments