நாளைய (04-04-2024) ராசி பலன்கள்
மேஷம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைத் திறனில் மாற்றம் ஏற்படும். ஆசிரியர்களுக்கு சாதகமான வாய்ப்பு அமையும். நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் அடைவீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : மதிப்பு கிடைக்கும்.
ரிஷபம்
முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். நட்பு மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : தடைகள் விலகும்.
ரோகிணி : வாய்ப்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிதுனம்
எதிலும் அவசரம் இன்றி செயல்படவும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். பயனற்ற அலைச்சல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் மீதான கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். அனுபவம் மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : பொறுமை வேண்டிய நாள்.
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
கடகம்
மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். உயர்வு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : தன்னம்பிக்கையான நாள்.
பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
ஆயில்யம் : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
சிம்மம்
உத்தியோகம் ரீதியான பயணங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும். கால்நடைகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள் அமையும். அமைதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : பயணங்கள் உண்டாகும்.
பூரம் : ஆதாயம் மேம்படும்.
உத்திரம் : மாற்றமான நாள்.
கன்னி
குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : எண்ணம் மேம்படும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : புரிதல் மேம்படும்.
துலாம்
பழைய நினைவுகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். முக்கியமான பொறுப்புகள் சாதகமாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் நிமிர்த்தமான பயணம் மேம்படும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். தைரியம் மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : பயணம் மேம்படும்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
விருச்சிகம்
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். பெரியவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பிரீதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
விசாகம் : சாமர்த்தியம் மேம்படும்.
அனுஷம் : புரிதல் மேம்படும்.
கேட்டை : ஏற்ற, இறக்கமான நாள்.
தனுசு
வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். ஆசை பிறக்கும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : அபிவிருத்தியான நாள்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
மகரம்
அனுபவ ரீதியான முடிவுகளால் நன்மை ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பகை விலகும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
உத்திராடம் : நன்மையான நாள்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
கும்பம்
வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தடைபட்ட பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வரவு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : அசதிகள் நீங்கும்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
மீனம்
மனதில் நினைத்த காரியம் கைகூடும். உடன்பிறந்தவர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : சூழ்ச்சிகளை அறிவீர்கள்.
No comments
Thank you for your comments