Breaking News

காஞ்சிபுரம் தண்டபாணி மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திரர் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம்,மார்ச் 6

காஞ்சிபுரம் தண்டபாணி மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55 வது ஜெயந்தி விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.



காஞ்சிபுரம் தண்டபாணி மேல்நிலைப்பள்ளியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55 வது ஜெயந்தி விழா சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தலைமையில் நடைபெற்றது.ஆதம் பாக்கம் ஆர்.கண்ணன் பாகவதர்,குருவார வழிபாட்டு மன்றத்தின் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தாளாளர் ஆர்.வெங்கட சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். 

விழாவில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் ஓவியம், பேச்சு, திருவாசகம் ஒப்புவித்தல் உள்ளிட்ட 6 வகையான போட்டிகளில் வெற்றி பெற்ற 86 நபர்களுக்கு ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த வெள்ளிக்காசு,பாராட்டுச்சான்றிதழ் ஆகியனவற்றை வழங்கினார்.நிறைவாக பள்ளித் தலைமை ஆசிரியை கே.தெய்வக்குமாரி நன்றி கூறினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.நிறைவாக பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை உஷாராணி மற்றும் பரிசு பெற வந்திருந்த மாணவ,மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments