Breaking News

காஞ்சிபுரம் இந்தியன் வங்கி பயிற்சி மையத்தில் மகளிர் தின விழா

காஞ்சிபுரம், மார்ச் 6:

காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் மகளிர் தின விழா மற்றும் மசாலா பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழா ஆகியன புதன்கிழமை நடைபெற்றது.

படவிளக்கம்}பயிற்சியை முடித்த மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஏ.ராஜாராமன்

காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் மகளிர் தின விழா வங்கியின் மண்டல மேலாளர் ஏ.ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பிஎம்எஸ் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை கோமதி முன்னிலை வகித்து மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

விழாவையொட்டி மசாலா பொருட்கள் பயிற்சியை முடித்த மாணவியர், பயிற்சி ஆசிரியைகள் ஆகியோர் இணைந்து மகளிர் தின விழா கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பளம்,ஊறுகாய்,மசாலா பொடிகள்,பருப்பு பொடி வகைகள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது.

விழாவிற்கு வங்கியின் மண்டல மேலாளர் ஏ.ராஜாராமன் தலைமை வகித்து பயிற்சியை முடித்த 35 பேருக்கும் அதற்கான சான்றிதழை வழங்கினார். சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு சின்னக்காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் செந்தில்நாதன்,நிதி ஆலோசகர் அரங்க மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சி மைய இயக்குநர் ஆர்.உமாபதி வரவேற்று பேசினார்.விழாவில் தையல் பயிற்சி ஆசிரியைகள் ஜெயந்தி,ஜெயநந்தினி,அம்சா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments