Breaking News

மக்களவைத் தேர்தல் அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு

சென்னை, மார்ச் 7-

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சந்தித்து முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினர்.

2-ம் கட்ட பேச்சுவார்த்தை

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் தேமுதிக இடையே 2 ஆம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று (மார்ச். 6) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேமுதிக சார்பில் எல்.கே. சுதிஷ், இளங்கோவன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.

2-ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

வெற்றிக் கூட்டணி

அப்போது அவர் தெரிவித்ததாவது,  "அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்தகட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும். எதிர்காலத்தில் அதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறும்." என்று தெவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு, அதிமுக 4 இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பார்வர்டு பிளாக்

இதேபோன்று, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன்  தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில்  நேற்று  நேரில் சந்தித்து முழு ஆதரவை  தருவதாக தெரிவித்துக் கொண்டனர். 



 

No comments

Thank you for your comments