Breaking News

குடிநீர் குழாய் வெடிப்பு - விரைந்து முடிக்க எம்எல்ஏ எழிலரசன் அறிவுறுத்தல்

காஞ்சிபுரம் 13 வட்டம் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவில் குடிநீர் குழாய் வெடிப்பு ஏற்பட்டு இரண்டு நாட்களாக பணி நடந்து வருகிறது ,


மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுவதால் விரைந்து முடிக்குமாறு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்  அறிவுறுத்தினார். 

இன்று முதல் குடிநீர் வினியோகம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 உடன் மாநகராட்சி மேயர்  மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர் மோகன் யுவராஜ்,  மாமன்ற உறுப்பினர்  சரஸ்வதி ,பாலமுருகன் பிரகாஷ் தமிழ் கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி பொறியாளர் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடனே இருந்தனர்.

No comments

Thank you for your comments