Breaking News

கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிப்பது குறித்து ஆய்வு கூட்டம்

 காஞ்சிபுரம்  .

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிப்பது தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று (06.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்து, குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழி செய்யும்மாறு கேட்டுக் கொண்டார். மேலும் குடிநீர் தொடர்பான புகார்களை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், குடிநீர் வீணாக்காமல் இருக்கவும் மின்சாரம் சேமிக்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

இவ் ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.தண்டபாணி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திருமதி. லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments