வேலூர் மாநகராட்சியில் விதிமுறை மீறிய ஜவுளிக்கடை கட்டடம்-நடவடிக்கை பாயுமா?
வேலூர் மாநகராட்சியில் விதிகளை மீறி கட்டப்படும் வணிக வளாக கட்டடங்கள் மீது நகரமைப்பு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நில அபிவிருத்தி பணி அல்லது கட்டுமான பணியை தொடங்குவதற்கு முன்பு, பணிக்கான விண்ணப்பத்தின் பேரில் நகர் ஊரமைப்பு துறையின் கீழ் இயங்கும் உள்ளூர் திட்ட குழுமம் (Local Planning Authority) அல்லது உள்ளாட்சி அமைப்பால் தரப்படும் திட்ட அனுமதியின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடத்திற்கான உரிமத்தை (Building Permission) அளிக்கின்றன. இவ்வாறு கட்டப்படும் கட்டடங்களில் வாகன நிறுத்துமிடம், கழிவறைகள், ஜன்னல்கள், வராண்டா, தீத்தடுப்பு சாதனங்கள், அவசர வழி இருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
ஆனால், அண்மைக்காலமாக கட்டப்படும் கட்டடங்கள், இதுபோன்ற விதிகளை பின்பற்றாமலேயே கட்டப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
நகர்ப்பகுதியில் காலை, மாலை வேலைகளில் சாலையின் இருபுறமும் நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்து உயிரிழப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது. விழாக் காலங்களில் வணிக வளாகங்களுக்கு வருவோர் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இருப்பினும் நெருக்கடி குறைவதில்லை. விபத்துகளும் குறைவதில்லை.
![]() |
| ஆணையர் ஜானகி |
2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதுமான வாகன நிறுத்த வசதியின்றி விதிமுறைகள் மீறிய கட்டடங்கள், சாலையின் இருபுறம் ஆக்கிரமித்துள்ள வாகனங்களால் போக்குவரத்து நெரிசலே முதல் காரணம்.
நகர்ப் பகுதியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு அனுமதி கோரும்போது அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவே ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால், பணிகள் மேற்கொள்ளும்போது பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதில்லை எனத் தெரிகிறது. மேலும் சில வணிக நிறுவனங்கள் பார்க்கிங் இடத்தையும் வணிக வளாகமாக பயன்படுத்துகின்றன. வேலூரில் இதுபோன்று சில வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், அன்மையில் திறப்பு விழா கண்ட “எண்ணம்” ஜவுளி நிறுவனமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இதுபோன்று விதிகளை மீறி செயல்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி, 4-வது மண்டலம், ஆரணி-காட்பாடி சாலையில், தர்மராஜா கோயில் தெரு, தோட்டப்பாளையம் வேலூர்-632004 என்ற முகவரியில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள ஜவுளிக்கடை கட்டடம்
Tamil Nadu Town and Country Planning Act, 1971-ன் படி Amendments To The Tamil Nadu Combined Development And Building Rules, 2019-ன் படி விதிமீறல் உள்ளது.
மாநகராட்சி அனுமதித்த வரைபடம் அடிப்படையில் கட்டடம் கட்டமைப்பு மாறுபட்டுள்ளது.
கட்டடம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள அளவின் விவரம்-ஆர்டி தகவல்
மொத்தம் இடம் - 577.50 சமீ (6216ச.அ)
கட்டடம் கட்டிய இடம் - 29 X 97=2813 ச.அடி
கட்டடம் ஒப்புதல் அளித்துள்ள தளம் (Floor) & stilt + Four Floors
stவீறீt (வாகன நிறுத்தம் இடம்) - 29 X 97 ச.அடி
முதல் தளம் - 29 X 97 ச.அடி
இரண்டாம் தளம் - 29 X 97 ச.அடி
மூன்றாம் தளம் - 29 X 97 ச.அடி
நான்காவது தளம் - 29 X 97 ச.அடி
கட்டடம் கட்டியுள்ள மொத்த பரப்பளவு - 14065 ச.அடி
விதிமீறல்கள்
ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) வாயிலாக பெற்ற தகவலின்படி:
1. கட்டடம் கட்டியுள்ள அளவு போக மீதியுள்ள காலி நிலம் போதுமான அளவு இல்லை.
2. தரை தளம் stவீறீt - வாகன நிறுத்தம் இடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகன நிறுத்தம் இடத்தில் அதாவது தரை தளம்-stவீறீt வர்த்தக இடமாக கட்டப்பட்டுள்ளது.
3.Tamil Nadu Town And Country Planning Act, 1971-ன் படி AMENDMENTS TO THE TAMIL NADU COMBINED DEVELOPMENT AND BUILDING RULES, 2019-ன் படி விதிமீறல்கள் உள்ளன.
4. விதி மீறல்களுடன், மாநகராட்சி அனுமதித்த வரைபடம் அடிப்படையில் கட்டடம் கட்டமைப்பு மாறுபட்டுள்ளதால் வரி விதிப்பு கணக்கீடு தவறாகும். இதனால் மாநகராட்சிக்கு அதிகப்படியான வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
5. கட்டடம் கட்டியுள்ள நில அளவு 29 X 97=2813 ச.அடி என்றால் மீதியுள்ள காலி நில அளவு 3403 ச.அ எங்கே?
6. கட்டடத்தை ஆய்வு செய்யாமல் கட்டிட பணி முடிவுற்றபின் கட்டிடப் பணி முடிவுபெற்றதற்கான அறிக்கையை (Completion report) வழங்கியது யார்?
7. கட்டிடப் பணி முடிவுபெற்றதற்கான அறிக்கையை (Completion report for assessment) வழங்கவில்லை என்றால் மின் இணைப்பு பெற்றது எப்படி?
8.தீ அணைப்பு சான்று பெறாமல் கட்டடம் திறக்கலாமா?
ஆரணி - காட்பாடி சாலையானது தினமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் நீதிமன்றம் வரை அரசு அலுவலகங்களுக்கு சென்று வர மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை என்பதால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. மேலும், சி.எம்.சி. மருத்துவமனை வெளியேறும் வழி அச்சாலையில் உள்ளதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகின்றது.
![]() |
| போக்குவரத்து நெரிசல் |
இந்நிலையில் இந்த ஜவுளிக்கடை கட்டடம் விதிமீறல்களுடன் வாகன நிறுத்தம் இடத்தை வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் இடமாக கட்டப்பட்டுள்ளது. இதனால் இக்கடைக்கு வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. மேலும் அந்த சாலை பகுதியில் போதுமான நடைபாதை வசதி இல்லை. ஏற்கனவே, அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு அந்த ஜவுளிகடையால் அந்த சாலை போக்கு வரத்து நெரிசலால் திணறியது. பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். தனி ஒரு வர்த்தக நிறுவனத்தால் அப்பாவி பொதுமக்கள் பாதிப்படைவது சரியா?. இந்த போக்குவரத்து நெரிசல்களால் அதிக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) வாயிலாக பெறபட்ட தகவலின்படி ஜவுளிக்கடை கட்டடம் விதிமீறல் என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது.
அதுமட்டுமின்றி இந்த கட்டட திறப்புவிழாவில் மாவட்ட கலெக்டர் பங்கேற்றதால் கலெக்டர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிவருகின்றனர்.
அனுமதிக்கு மாறாக கட்டுமானம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், கட்டிட உரிமையாளர் / கட்டுமான நிறுவனர் மீது தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் சட்டப்பூர்வ அமலாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மருத்துமவனை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் மற்றும் விபத்து அபாயமும் உள்ளதால் வெல்கம் தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வேலூர் உள்ளூர் திட்ட குழுமம் /மாவட்ட நகர் ஊரமைப்பு அனுமதியற்ற கட்டிடங்களின் மீது நகர் ஊரமைப்புச் சட்டம் பிரிவு 56, 57-ன் கீழ் உரிய அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வேலூர் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதுபோன்று விதிமீறல்கள் கட்டடத்திற்கு சீல் வைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.png)


No comments
Thank you for your comments