Breaking News

காஞ்சிபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், ஜன.24:

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.


படவிளக்கம் : காஞ்சிபுரம் நடுத்தெருவில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்(உள்படம்)மூலவர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

சின்னக்காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவில் புதியதாக கட்டப்பட்டுள்ளது ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்.கத்ரி இளைஞர் சங்கத்தினரால் கட்டப்பட்ட இத்திருக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நிகழ் மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்னேசுவர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 

மறுநாள் 22 ஆம் தேதி ஆலய வாஸ்துவும்,23 ஆம் தேதி மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தின் போது டிரோன் மூலம் வானத்திலிருந்து ராஜகோபுரத்தின் மீதும் கூடியிருந்த பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டன.

பின்னர் மூலவர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 15-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நாதசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன.

புதன் கிழமை இரவு ஆலயத்தில் சீனிவாசா திருக்கல்யாணமும் நடைபெற்றது.ஏற்பாடுகளை சேக்குப்பேட்டை நடுத்தெரு கத்ரி இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments