பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனம் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
காஞ்சிபுரம், மார்ச் 13:
காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனம் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் அதில் உயிர் காக்கும் உபகரணங்கள் ஆகியனவற்றுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் மதிப்பிலானவை எஸ்டிபிஐ கட்சிக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு நிறுவனத்தின் உரிமையாளர் தா.சுந்தர்கணேஷ் தலைமை வகித்தார். உரிமையாளர் தா.பச்சையப்பன் முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் கலந்து கொண்டு பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கான சாவியை எஸ்டிபிஐ கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாபர்ஷெரீப்பிடம் வழங்கினார்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சுன்னத்ஜமாஅத் பள்ளி நிர்வாகிகள், பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவன மேலாளர்கள் பார்த்தீபன், கந்தவேல் உட்பட பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆம்புலன்சை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments