Breaking News

கூட்டுறவுச் சங்கங்களிடம் வசூலித்த நிதி ரூ.1.2 கோடி ஒன்றிய செயலாட்சியரிடம் வழங்கல்

காஞ்சிபுரம், மார்ச் 13:

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து வசூலித்த நிதி மொத்தம் ரூ.1.2 கோடியை தமிழக கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் கே.சத்தியநாராயணன் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்காக ரூ.60,67,386 மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்காக ரூ.41,43,317 உட்பட மொத்தம் ரூ.1.2 கோடி நிதி வசூலிக்கப்பட்டிருந்தது. 

இத்தொகையினை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் எஸ்.சுப்பிரமணியனிடம் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வழங்கினார்.இத்தொகை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் முன்னிலையில் வழங்கப்பட்டதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படவிளக்கம் : தமிழக கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் எஸ்.சுப்பிரமணியனிடம் கூட்டுறவு நிதி ரூ.1.2 கோடியை வழங்கும் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ

No comments

Thank you for your comments